புதுவை ஐடியாவை தமிழகமும் பின்பற்றலாமே?

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (11:41 IST)
புதுச்சேரியில் நவம்பர் 8 முதல் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு.

 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மெல்ல பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நவம்பர் 1 முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதை தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 8 முதல் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். காலை 9.30 முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் பள்ளிகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்தில் 6 நாட்கள் அரை நாள் மட்டும் சுழற்சி முறையில் இயங்கும். அதாவது, 1, 3, 5, 7 ஆம் வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், 2, 4, 6, 8 ஆம் வகுப்புகள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் நடைபெறும். 
 
மாணவர் சிறப்பு பஸ்களை இயக்க தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளது. அதை இறுதி செய்த பின்னர் மாணவர் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். 9 ஆம் வகுப்புக்கு மேல் முழுநேரமும் வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. 
 
தமிழகத்தில் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தீபாவளிக்கு பள்ளிகள் எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என கேள்வி எழுந்துள்ளது. ஆனால் புதுச்சேரியில் தீபாவளி முடிந்த பின்னர் பள்ளிகள் திறக்கப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்