புதுச்சேரியில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத பாதிப்பு 1,27,735 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வர தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்நிலையில், புதுச்சேரியில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத பாதிப்பு 1,27,735 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு 467 பேர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இதுவரை 1,25,411 பேர் குணமடைந்துள்ளனர் என்று புதுச்சேரி அரசு தகவல் அளித்துள்ளது.