கொரோனா வைரஸ் ஊரடங்கால் பொருளாதார தேக்க நிலை காரணமாக தனியார் பள்ளிகள் முழு கட்டணத்தையும் பெற்றோர்களிடமிருந்து கேட்கக்கூடாது என்றும் அதிகபட்சமாக 40 சதவீதம் கட்டணங்களை மட்டுமே தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சற்று முன் எச்சரிக்கை விடுத்திருந்தது
மேலும் தனியார் பள்ளிகள் 100 சதவீதம் கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் அளிக்கலாம் என்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் இந்த புகார்களை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது
இந்த நிலையில் தற்போது சென்னை ஆட்சியர் இதுகுறித்து அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி சென்னை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் முழு கட்டணங்களை கேட்டால் உடனடியாக feescomplaintcell@gmail.com என்ற இ-மெயில் மூலமாக புகார் அளிக்கலாம் என்றும் புகார் பெறப்பட்டதும் அந்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது