ஒரே வாரத்தில் 22 லட்சம் பப்ஜி கணக்குகள் முடக்கம் !
புதன், 2 செப்டம்பர் 2020 (16:13 IST)
இன்றைய காலத்தில் குழந்தைகள் இளையோர் முதல் பெரியோர் வரை அனைவரும் பப்ஜி கேம்களை விளையாடி வருகின்றனர். சிலர் இதற்கு அடிமையாகி மனதளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பல தரப்பிலிருந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
இந்த பப்ஜி ரக விளையாட்டுகளை ஆன்லைனில் விளையாட்டி சிறுவர்கள் பெற்றோருக்கே தெரியாமல் பணத்தை எடுத்துச் செலவு செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் விளையாட்டு மோசடியில் ஈடுபட்ட 22,73, 152 பேரின் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்பட்டதாக பப்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பப்ஜி கேமில் புதுவித அப்டேட் வரவுள்ளதாகவும் அனைவரையும் கவரும் வகையில் இது இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.