பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

Prasanth Karthick
புதன், 15 மே 2024 (19:34 IST)
கோவையிலிருந்து சவுக்கு சங்கரை திருச்சி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது பெண் காவலர்கள் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், பெண் போலீஸாரிடம் போன் நம்பர் கேட்டதாக சவுக்கு சங்கர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.



போலீஸ் அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து சவுக்கு சங்கர் அவதூறாக பேசியதாக பலரும் வழக்குத் தொடர்ந்த நிலையில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது சென்னை, திருச்சியிலும் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் திருச்சி மாவட்ட முசிறி டி.எஸ்.பி யாஸ்மின் அளித்த புகாரில் விசாரிக்க சவுக்கு சங்கர் இன்று கோவையிலிருந்து திருச்சி மகிளா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதற்காக பெண் போலீஸார் மட்டுமே சென்று சவுக்கு சங்கரை காவலர்கள் வேனில் திருச்சி நீதிமன்றம் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் நீதிமன்ற விவாதத்தின் போது, சவுக்கு சங்கரை திருச்சி அழைத்து வரும் வழியில் பெண் போலீஸார் சேர்ந்து தாக்கியதாகவும், அதை வீடியோ எடுத்து பல போலீஸ் அதிகாரிகளுக்கு அவர்கள் அனுப்பியதாகவும் சவுக்கு சங்கர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் சவுக்கு சங்கர் மேல் தங்கள் சுண்டு விரல் கூட படவில்லை என மகளிர் போலீஸார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

மேலும் வேனில் வந்தபோது தன்னிடம் சவுக்கு சங்கர் தனது பெயர் என்ன என்றும், செல்போன் எண் தரும்படியும் கேட்டதாக சவுக்கு சங்கரை அழைத்து வந்த பெண் போலீஸாரில் ஒருவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார். பெண் போலீஸார் யாரும் பெயர் பட்டை அணிந்திராமல் இருந்ததால் பெயரை கேட்டதாக சவுக்கு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வாத பிரதிவாதங்களுக்கு பிறகு சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.

பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியதும், சவுக்கு சங்கர் தன்னிடம் செல்போன் எண் கேட்டதாக பெண் காவலர் குற்றம் சாட்டியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்