அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள வாக்கு இயந்திரங்களின் சோதனை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணைய அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு தயாராகும் வகையில் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களின் சோதனையை செய்ய உள்ளனர்..
இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் பேசியபோது வாக்குப்பதிவு இயந்திரங்களின் சோதனை அடுத்த மாதம் முதல் நடைபெற உள்ளது என்றும் மக்களவைத் தேர்தலுக்கான விவிபேடு இயந்திரங்கள் ஆகியவற்றை மதிப்பிடும் பணியின் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சோதனை நடத்தப்படும் என்றும் சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.