தினகரனிடம் இருந்து தனது குடும்பத்தை சசிகலா காப்பாற்றிக்கொள்ள வேண்டும் - அமைச்சர் சண்முகம்

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (17:27 IST)
ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா சமீபத்தில் ரிலீஸானார். பின்னர் கடந்த 8 ஆம் தேதி தமிழகம் வந்தார். அப்போது அவருக்கு அதிமுக கொடியுடைய காரை அதிமுக நிர்வாகிகள் 7 பேர் கொடுத்தனர்.

இதுதொடர்பாக ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து அறிக்கை வெளியிட்டனர், அதில்,  சசிகலாவுக்கு உதவியதாக 7 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினர்.

தமிழகம் வந்தடைந்த சசிகலா, விரைவில் எல்லோரையும் சந்திக்கவுள்ளதாகவும், அன்புக்கு அடிமைல் அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டேன் எனக் கூறினார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் கூறியுள்ளதாவது:

அதிமுககொடியை பயன்படுத்தியது தொடர்பாக அவர் மீது வழக்குத் தொடரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்,டிடிவி. தினகரனிடம் இருந்து தங்களையும் தனது குடும்பத்தையும் சசிகலா காப்பாற்றிக்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்