அதிமுக பொதுசெயலாளராக இருந்த சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு விடுதலையான சசிகலா அரசியலில் தீவிரம் கவனம் செலுத்தி வரும் நிலையில் ஆளுங்கட்சியான திமுகவை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: ஆண்டு முழுவதும் மத்திய அரசை எதிர்த்துக் கொண்டிருந்தால் நீங்கள் எப்படி உங்கள் திட்டங்களை செயல்படுத்துவீர்கள் என சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு முன்னதாக அவர்,அதிமுகவில் ஒரு சிலர்தான் என்னை எதிர்க்கின்றனர். பலர் என்னுடன் பேசிக் கொண்டுதான் உள்ளனர். என்னை அதிமுகவில் இணைத்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்ல அவர்கள் யார்? எனது தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்படும் என எனக்கு 100 சதவீத நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.