வைகோ எம்பியா? நோ நெவர்... பாஜகவுக்கு வக்காலத்து வாங்கும் சசிகலா புஷ்பா!

Webdunia
வியாழன், 11 ஜூலை 2019 (15:07 IST)
பிரதமர் மோடிக்கு எதிராக பேசி வரும் வைகோவிற்கு எம்பி-யாக பதவி பிரமாணம் செய்ய கூடாது என சசிகலா புஷ்பா மனு ஒன்றை அளித்துள்ளார். 
 
2009-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட தேசதுரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைப்பட்டுள்ள நிலையில் அவர் ராஜ்யசபா எம்பி ஆவதில் எந்த சிக்கலும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் விரைவில் எம்பி-யாக பதவியேற்க உள்ள வைகோவிற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இப்போது பாஜகவுக்கு வக்காலத்து வாங்கி சசிகலா புஷ்பா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சசிகலா புஷ்பா ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில், தேச துரோக வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவரும், பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். 
 
இதற்கு முன்னரும் சசிகலா புஷ்பா பாஜகவுக்கு ஆதரவக பேசிய நிலையில் இப்போது மீண்டும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து வைகோவை எதிர்த்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்