ஜெயலலிதா சவப்பெட்டி விவகாரம்: ஓபிஎஸ்-ஐ கைது செய்ய ஆர்.கே..நகரில் ஆர்ப்பாட்டம்

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (04:44 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மையை சவப்பெட்டி மீது வைத்து மலிவான பிரச்சாரம் செய்து, ஜெயலலிதாவை அவமதித்த ஓபிஎஸ் மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர்களை கைது செய்ய வேண்டும் என்று சசிகலா தரப்பினர் நேற்று நள்ளிரவில் ஆர்ப்பாட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


 


நேற்று மாலை  ஆர் கே நகர் தொகுதியில் ஓபிஎஸ் அணியின் சார்பபில் போட்டியிடும் மதுசூதனனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்ற மாஃபா பாண்டியராஜன், ஜெயலலிதா சவப்பெட்டி மாதிரியை, பிரச்சார வாகனத்தின் முன் வைத்து பிரச்சாரம் செய்தார் இந்த பிரச்சாரத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இப்படி ஒரு மலிவான பிரச்சாரம் செய்து மறைந்த முதல்வரை அவமதிப்பது தேவையா/ என்று பொதுமக்களே அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில் ஜெ. சவப்பெட்டி பிரச்சாரத்தை  கண்டித்தும், ஓபிஎஸ், மாஃபாவை கைது செய்ய கோரியும் ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலகம் முன் சசிகலா அணியினர் மறியல் 50 பேருக்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அடுத்த கட்டுரையில்