சென்னை மெரினா கடற்கரையில் தேர்தல் விழிப்புணர்வு மணல் சிற்பம் !!

Webdunia
சனி, 3 ஏப்ரல் 2021 (09:41 IST)
எட்டு அடியில் தேர்தல் விழிப்புணர்வு மணல் சிற்பம். பிக்பாஸ் ஆதி தேர்தலில் பணம் பரிசுப் பொருட்கள் வாங்காமல் நேர்மையான வர்களுக்கு  வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். 

 
வேலம்மாள் வித்யாலயா கல்வி நிறுவனம் சார்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில்    பள்ளி மாணவர்கள் 8 பேர் கொண்ட குழு  ஒரே நாளில்  8 அடி உயரத்திற்கு விழிப்புணர்வு மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது. 
 
இன் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிக்பாஸ் ஆதி மற்றும் நடிகர் ஜான் விஜய்  அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் ஆதி பேசினார்  அப்போது அவர் படித்தவர்கள் அதிகம் வசிக்கும் சென்னை போன்ற பெருநகரங்களில்  வாக்கு சதவீதம் குறைவாக உள்ளது என ஆதங்கம் தெரிவித்தார்.  யாரின் மீதும் நம்பிக்கை இல்லை என்றால் நோட்டாவுக்கு வாக்களியுங்கள் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்