சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே காலை 9.32, 10.08, 10.56, 11.48 ஆகிய நேரங்களிலும் மதியம் 12.15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கமாக செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே காலை 10.55, 11.30 மதியம் 12.20, 1.00, 1.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.