திடீரென வங்கிக்கணக்கில் ரூ.753 கோடி டெபாசிட்.. அதிர்ச்சி அடைந்த சென்னை பார்மஸி ஊழியர்..!

Webdunia
சனி, 7 அக்டோபர் 2023 (13:14 IST)
தேனாம்பேட்டையை சேர்ந்த முகமது இத்ரிஸ் என்ற பார்மஸி ஊழியரின் வங்கி கணக்கில் ரூ.753 கோடி டெபாசிட் ஆனதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் முகமது இத்ரிஸின் வங்கி கணக்கை, சம்மந்தப்பட்ட வங்கி முடக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
தஞ்சை பூதலூரை சேர்ந்த கணேசன் வங்கி கணக்கில் ரூ.756 கோடி வரவு வைக்கப்பட்டதாகவும் நேற்று குறுஞ்செய்தி வந்தது. இந்த நிலையில் இன்று தேனாம்பேட்டையை சேர்ந்த முகமது இத்ரிஸ் என்ற பார்மஸி ஊழியரின் வங்கி கணக்கில் ரூ.753 கோடி டெபாசிட் ஆகியுள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரது வங்கி கணக்கிற்கு திடீரென ரூ.9000 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த சம்பவத்தில் ரூ.9000 கோடி ஆட்டோ டிரைவர் வங்கி கணக்கிருக்கு தவறுதலாக பரிவர்த்தனை செய்ததாகவும், அதன் பின்னர் அவருடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி வங்கி அதிகாரிகள் அந்த பணத்தை திரும்ப பெற்றதாகவும் கூறப்பட்டது. ஆதுமட்டுமின்றி திடீரென சம்பந்தப்பட்ட தனியார் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ராஜினாமா செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
சாமான்யர்களின் வங்கி கணக்குகளில் கோடிகளில் வரவு வைக்கப்பட்டதாக அடுத்தடுத்து வரும் குறுஞ்செய்திகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்