ரூ.5600 கோடி ஊழல்.. திமுக ஃபைல்ஸ் 2 வீடியோவை வெளியிட்ட அண்ணாமலை..!

Webdunia
புதன், 26 ஜூலை 2023 (18:16 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை  ராமேஸ்வரத்தில் இருந்து நடை பயணத்தை தொடங்கயிருக்கும் நிலையில் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக ஃபைல்ஸ் இரண்டாம் பாகத்தை வெளியிட்டுள்ளார். அதில் 30 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் கூறிய போது கூறியதாவது
 
இன்று, தமிழக பாஜக மூத்த தலைவர்களுடன், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியைச் சந்தித்தோம். ஆளுநர் அவர்களிடம், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களை கொடுத்தோம்,
 
மேலும், ரூ.5600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக அவர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம்" என்று  பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்