பத்திரிகைகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு ரூ.5000 ஊக்கத் தொகை

Webdunia
புதன், 26 மே 2021 (12:40 IST)
பத்திரிகைகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான ஊக்கத் தொகையாக ரூ.5000 வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு.  

 
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் முதற்கட்டமாக முன்னதாக ரூ.2 ஆயிரம் ரேசன் கடைகள் மூலமாக விநியோகிக்கப்பட்டது.
 
இந்நிலையில் இரண்டாம் தவணையாக ரூ.2000 ஜூன் 3 ஆம் தேதி வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து பத்திரிகைகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான ஊக்கத் தொகையாக ரூ.5000 வழங்கப்படும் எனவும் கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்