காக்டெயில் பெயரில் மருந்து: ரூ.1,19,500-க்கு விற்பனையாம்...!

செவ்வாய், 25 மே 2021 (08:28 IST)
ரோச் இந்தியா நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக ரோச்சின் ஆண்டிபாடி காக்டெயில் எனும் மருந்து ஒன்றை தயாரித்துள்ளது. 

 
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மக்களை ஆட்டிப்படைக்கும் நிலையில், பிரபல மருது தயாரிப்பு நிறுவனமான ரோச் இந்தியா நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான மருந்து ஒன்றை தயாரித்துள்ளது. ரோச்சின் ஆண்டிபாடி காக்டெயில் என இந்த மருந்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. 
 
இந்த மருந்தை அவரச பயன்பாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து சிப்லா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மருந்து லேசான மற்றும் மிதமான பாதிப்பு கொண்ட நோயாளிகளுக்கு சிறந்த பலனை அளிக்கும் என தெரிவித்துள்ளது. 
 
மேலும் 70% வரை இறப்பு குறைக்கப்படும் என்வும் இந்த மருந்தின் ஒரு டோஸ் விலை ரூ.59,750 ஆகவும், இரண்டு டோஸ் விலை ரூ.1,19,500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 டோஸ்கள் கொண்ட ஒரு பாக்கெட்டை 2 நோயளிகளுக்கு பயன்படுத்தலாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்