தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையா? அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு

Mahendran
சனி, 19 அக்டோபர் 2024 (08:48 IST)
தீபாவளி தினத்திற்கு மறுநாள் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து, வெள்ளிக்கிழமை வேலை நாளாக இருப்பதால் வெளியூர் செல்லும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் அன்றைய தினம் இரவே கிளம்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது.
 
அதற்கு பதிலாக வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டால், சனி, ஞாயிறு விடுமுறையை சேர்த்து மொத்தம் நான்கு நாள் விடுமுறை கிடைக்கும். இதனால் வெள்ளிக்கிழமை விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்றும் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளனர்.

நவம்பர் 1ஆம் தேதி விடுமுறை அறிவித்தால், நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும் என்பதால் சொந்த ஊர் சென்றவர்கள், அரசு ஊழியர்கள், மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அரசு ஊழியர்களின் இந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப, நவம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறையை அறிவித்துவிட்டு, அதற்கு பதிலாக வேறு ஒரு நாளில் வேலை நாள் குறித்து அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்று கூறப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்