தீபாவளி அன்று காத்திருக்கிறது செம மழை! எங்கே தெரியுமா? - வானிலை ஆய்வாளர்கள் கணிப்பு!

Prasanth Karthick

வெள்ளி, 18 அக்டோபர் 2024 (10:04 IST)

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தீபாவளி அன்று மழை பெய்யுமா என்பது குறித்து வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

 

 

வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்த மாத இறுதியில் தீபாவளி பண்டிகையும் வர உள்ளது. தீபாவளி பண்டிகையை மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது வழக்கம். ஆனால் தீபாவளி மழைக்காலத்தில் வருவதால் சில சமயம் மழையால் கொண்டாட்டங்கள் பாதிக்கப்படுகின்றன.

 

இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி அன்று மழை பெய்யுமா என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி, வடக்கு அந்தமான் கடல் பகுதியில் 21ம் தேதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக வலுப்பெற்று ஆந்திரா - வங்கதேசம் இடையே கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழக பகுதிகளில் ஈரப்பதம் இழுக்கப்பட்டு வறண்ட வானிலையே நிலவும் என்றும், நவம்பர் 5ம் தேதிக்கு பிறகே தீவிர பருவமழைக்கான சூழல் நிலவுவதால் தீபாவளிக்கு பின்னர் தமிழகத்தில் மழை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

தீபாவளி நேரத்தில் ஆந்திரா, ஒடிசா, வங்கதேச பகுதிகளில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்