தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் அறிவிப்பு

Mahendran

வியாழன், 17 அக்டோபர் 2024 (16:00 IST)
தீபாவளி தினத்தில் இரண்டு மணி நேரமே பட்டாசு வெடிக்க அனுமதி என்று புதுவை மாநில சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு குழுமம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி அன்று ஏராளமான பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்க அரசு அனுமதி தரலாம் என்று உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில், புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு குழுமம் வெளியிட்ட அறிவிப்பில், தீபாவளி தினத்தில் இரண்டு மணி நேரமே பட்டாசு வெடிக்க அனுமதி என்று தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்றும், அதேபோல் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என்று அறிவித்துள்ளது.

மேலும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், கல்விக்கூடங்கள், நீதிமன்ற சுற்றுவட்டாரங்களில் 100 மீட்டருக்குள் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

புதுவையை அடுத்து, தமிழகத்திலும் விரைவில் இதுபோன்ற அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்