புதுச்சேரியில் முடிவுக்கு வந்தது 24 நாட்கள் நீடித்த இழுபறி!

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (11:16 IST)
புதுச்சேரியில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் முதலமைச்சர் தவிர மற்ற எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்காமல் இருந்ததால் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது 
 
புதுச்சேரியில் துணை முதலமைச்சர், சபாநாயகர் மற்றும் இரண்டு அமைச்சர்கள் என நான்கு முக்கிய பதவிகளை பாஜக கேட்டதால் அதற்கு என்ஆர் காங்கிரஸ் தலைவர் மறுப்பு தெரிவித்ததால் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில் தற்போது ஒருவழியாக இழுபறி முடிவுக்கு வந்துள்ளது 
 
துணை முதலமைச்சர் பதவியை தர முடியாது என்றும் ஆனால் அதே நேரத்தில் சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர்கள் பதவி தர முதலமைச்சர் ரங்கசாமி ஒப்புக்கொண்டதை அடுத்து விரைவில் அமைச்சரவை பதவி ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் சபாநாயகர் பதவி பாஜகவிடம் இருப்பதால் எந்த நேரமும் ரங்கசாமி ஆட்சிக்கு ஆபத்து என்றும் ரங்கசாமி அதிகபட்சமாக ரிஸ்க் எடுக்கிறார் என்றும் அவரது கட்சியை சேர்ந்தவர்களே கூறிவருகின்றனர்
 
ஆனால் சபாநாயகர் பதவியை தர மறுத்தால் நியமன உறுப்பினர்கள் மற்றும் சுயச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் பாஜக ஆட்சியைப் பிடித்து விடும் என்ற நிலை இருந்ததால் முதல்வர் ரங்கசாமி இதற்கு ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்