இனிமேல் பாக்கெட்டில் ரேசன் அரிசி: அமைச்சர் தகவல்

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (16:58 IST)
இனிமேல் பாக்கெட் மூலம் ரேஷன் அரிசி வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்
 
 தற்போது ரேஷன் கடைகளில் அரிசி பயனாளர்கள் கொண்டுவரும் பைகளில் தான் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இனிமேல் ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலம் அரிசி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார் 
 
அதுமட்டுமின்றி புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளின் இருப்பிடத்திற்கு அனுப்பப்படும் என்றும் புதிய அட்டைகளுக்கு பொதுமக்கள் அலுவலகத்திற்கு வந்து அலைய வேண்டிய தேவை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
அமைச்சர் சக்கரபாணியின் இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்