சிறந்த ரேசன் கடை ஊழியர்களுக்கு பரிசு - அமைச்சர் சக்கரபாணி

வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (15:36 IST)
தமிழகத்தில் கடந்த ஆண்டு      நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்  திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று,  முதல்வராக மு.க.ஸ்டாலின்    பொறுப்பெற்று ஆட்சி நடத்தி வருகிறார்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல்  மக்களுக்கு பல்வேறு நடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தி வரும் நிலையில் இன்று முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி,   மாவட்ட அளவில் சிறந்த நியாயக்கடை  விற்பனையாளர்கள் எடையாளர்களைத் தேர்வு செய்தது பரிசுகள் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்,  ரேசன் கடைகளில்  வழங்கப்படும் அரிசியில் தரமில்லை என புகார்கள் வருவதை அடுத்து, இனி குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான அரிசி   விநியோகிக்கப்படும் எனவும்,  குடும்ப அட்டை வேண்டி யார் விண்ணப்பித்தாலும் அவர்களுக்கு 1  நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்திருந்தது குறிப்பிடத்தகக்து.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்