சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சுப்பையா சண்முகம் என்பவர் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர் மற்றும் ஆபரேஷன் தியேட்டர் செவிலியர் ஆகியோர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டர் வளாகத்திற்குள், பாலியல் செயலில் ஈடுபட்டு வந்ததாக புகார் வந்தது.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் சுப்பையா மீது விசாகா கமிட்டியின் உத்தரவுக்கு பிறகு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.