உயிரைக் குடிக்கும் கொடிய நோயான கொரோனா வைரசை கட்டுப்படுத்த ராமதாஸ் அறிவுரை…

Webdunia
செவ்வாய், 24 மார்ச் 2020 (13:08 IST)
உயிரைக் குடிக்கும் கொடிய நோயான கொரோனா வைரசை கட்டுப்படுத்த ராமதாஸ் அறிவுரை…

கொரோனா எச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மாவட்ட எல்லைகள் மூடப்பட இருக்கின்றன. இதனால் நேற்று முதலே மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு திரும்புவதால் கூட்டம் அலை மோதுகிறது. மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக பொருட்களை வாங்கி வருகின்றனர்.

மக்கள் வெளியேற கூடாது என்று அறிவித்துள்ள நிலையில் வீடற்ற, ஆதரவற்ற மக்களின் நிலை குறித்த கேள்வி எழுந்துள்ளது. தமிழக மக்களுக்கு நிவாரண பணிகளை அறிவித்துள்ள நிலையில் ஆதரவற்ற மக்களுக்கான ஏற்பாடுகளையும் அரசு செய்து வருகிறது.

மாவட்டங்கள் முழுவதும் பொது சமையற்கூடங்களை ஏற்படுத்தி அதன் மூலம் சூடான, சுகாதாரமான உணவை ஆதரவற்றோர்களுக்கு அவரவர் வாழும் இடங்களுக்கே சென்று வழங்க ஏற்பாடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துரிதப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

ஜெர்மனியில் மிகக்கடுமையாக கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகளின் பயனாக அங்கு கொரோனா நோய்த்தொற்று குறையத் தொடங்கியுள்ளது.அடுத்த சில நாட்களில் நிலைமை மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே நடைமுறையை கடைபிடிப்பது தான் தமிழகத்தையும் காப்பாற்றும்! #PMKDemandsMoratoriumOnEMI

மேலும், அவர் தனது மற்றொரு பதிவில், உயிரைக் குடிக்கும் கொடிய நோயான கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் அரசுக்கு இணையான பங்கு மக்களுக்கும் உள்ளது. ஆகவே, பொது இடங்களில் கூடுவதையோ, தேவையின்றி பயணம் மேற்கொள்வதையோ பொது மக்கள் தவிர்க்க வேண்டும்! #PMKDemandsMoratoriumOnEM   என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்