முதல்வர் பழனிசாமியுடன் ரஜினிகாந்த் சந்திப்பு

Webdunia
ஞாயிறு, 10 பிப்ரவரி 2019 (08:36 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவின் திருமணம் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் முக்கிய பிரபலங்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகிறார்.
 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன், கமல்ஹாசன், இளையராஜா, சிவாஜி குடும்பம் என பல பிரமுகர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்த ரஜினிகாந்த் சற்றுமுன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அவருடைய க்ரீன்வேஸ் சாலை இல்லத்திற்கு சென்று சந்தித்தார்
 

தனது மகள் திருமணத்தில் பங்கேற்க முதல்வரை நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் அழைப்பிதழை வழங்கியதாகவும், அழைப்பிதழை பெற்றுக்கொண்ட முதல்வர் கண்டிப்பாக திருமணத்திற்கு வருவதாக உறுதி அளித்ததாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது. ரஜினி மகளின் திருமணத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்