நடிகா் ரஜினிகாந்தின் மகளும், இயக்குனருமான சௌந்தா்யா ரஜினிகாந்த், தொழிலதிபா் வணங்காமுடியின் மகனான விஷாகனை திருமணம் செய்துகொள்ள உள்ளாா். வருகின்ற 11ம் தேதி இவா்களது திருமணம் சென்னை போயஸ் காா்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் இன்று கோலாகலமாக நடந்தது. ரஜினியும் , லதா ரஜினிகாந்தும் சேர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மணமக்களை அறிமுகப்படுத்தினர்.