இன்று காலை 10 மணிக்கு நிர்வாகிகளை சந்திக்கும் ரஜினி: கட்சி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு?

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2020 (07:29 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகத்தினர்களை சந்திக்க இருக்கும் நிலையில் அவரது அரசியல் கட்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று காலை 10 மணிக்கு அவருக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் தனது மக்கள் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யவுள்ளார்.
 
புதிய கட்சி உதயம், சட்டமன்ற தேர்தலில் தனது நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் கட்சி தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பை வெளியிடும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
ஏற்கனவே அரசியல் வருகை குறித்து தனது ரசிகர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பேன் என ரஜினிகாந்த் கூறிய நிலையில் இன்று அவர் ஆலோசனைக்குப் பின்னர் தனது தெளிவான முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்த அறிவிப்புக்கு இன்று தான் கடைசி நாளாக இருக்கும் என்றும் இன்று அவர் அரசியல் குறித்த அறிவிப்பை ஒருவேளை வெளியிடவில்லை என்றால் அவர் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை என்றும் தமிழக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்