நம்புங்க, ரஜினி முழு அரசியல்வாதியாக எப்போதோ ஆகிவிட்டார்: மாரிதாஸ்

Webdunia
திங்கள், 16 மார்ச் 2020 (08:40 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் எப்போது காட்சி ஆரம்பிப்பார் என்றும் கட்சி ஆரம்பிப்பாரா? அல்லது பின் வாங்குவாரா? என்றும் போருக்கு பயந்து அவர் பின்வாங்கி விட்டதாகவும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் சமீபத்தில் ரஜினியை சந்தித்த மாரிதாஸ், ரஜினி ரசிகர்களையும் சந்தித்தார். அப்போது ரசிகர் ஒருவர் ’ரஜினி எப்போது கட்சி ஆரம்பிப்பார்? எப்போது அதிகாரபூர்வமாக கொடியை அறிவிப்பார் என்பது குறித்து கூறுங்கள் என்று கேட்டார். இதற்கு பதிலளித்த மாரிதாஸ் ’ரஜினிகாந்த் எப்போதோ முழு நேர அரசியல்வாதி ஆகிவிட்டார். அவர் கட்சி, கொடி ஆகியவற்றை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், அவர் தற்போது அரசியல் செய்து கொண்டுதான் இருக்கின்றார் 
 
ரஜினிகாந்த் கட்சி மற்றும் கொடியை அறிமுகம் செய்த அடுத்த நிமிடம் தமிழ்நாட்டில் உள்ள மூலைமுடுக்கெல்லாம் அந்த கட்சியின் பெயரும் கொடியும் தானாகவே போய் சேர்ந்து விடும். எனவே கட்சி ஆரம்பிப்பது ஒரு பெரிய விஷயம் அல்ல, அதற்கு முன்னால் ஒரு சில விஷயங்களை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஏற்கனவே அவர் கூறியது போலவே புரட்சி வர வேண்டும் என்றும் நல்லதை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றும் விரும்புகிறார். எனவே அவர் கட்சி ஆரம்பிப்பாரா? என்ற சந்தேகம் யாருக்கும் வேண்டாம். அவர் ஏற்கனவே கிட்டத்தட்ட கட்சி ஆரம்பித்து முழு நேர அரசியல்வாதி விட்டார் என்பதுதான் உண்மை, இதனை நம்புங்கள் என்று மாரிதாஸ் கூறினார் 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்