ரஜினிகாந்த் கூறுவதை ஏற்றுக் கொள்கிறேன்: எச்.ராஜா

ஞாயிறு, 15 மார்ச் 2020 (15:07 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தான் மூன்று திட்டங்கள் வைத்திருப்பதாகவும், தமிழகத்தில் ஒரு எழுச்சி, புரட்சி ஏற்பட வேண்டும் என்றும், மக்கள் விழிப்புணர்ச்சி அடைய வேண்டும் என்றும் இப்போது அரசியல் மாற்றம் ஏற்படவில்லை எனில் இனி எப்போதும் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.
 
இந்த நிலையில் ரஜினியின் இந்த கருத்து குறித்து கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து கூறிவிட்ட நிலையில் தற்போது எச்.ராஜா அவர்களும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா இதுகுறித்து கூறியதாவது: தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். அதாவது ஜாதிபலம் பணபலம் இல்லாமல் நேர்மையான தேர்தல் நடக்க வேண்டும் அதற்கு மக்களையும் தயார்படுத்த வேண்டும். எந்தக் கட்சியாக இருந்தாலும் அதன் தொண்டர்களைத் தயார்ப்படுத்த வேண்டும் என்ற அளவில் ரஜினிகாந்த் கூறுவதை ஏற்றுக் கொள்கிறேன். 
 
ஆனால் அதற்குப் பிறகு அவர் எப்படி செயலாற்றுவார், வருவார் வரமாட்டார், கட்சி ஆரம்பிப்பார், ஆரம்பிக்க மாட்டார் என்பதையெல்லாம் நாம் விவாதிக்க வேண்டியதில்லை. அது அவரோட முடிவு” என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்