ஈபிஎஸ் உத்தரவிட்டால் நாளையே பொதுக்குழுவை கூட்ட தயார்: ராஜன் செல்லப்பா

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (18:43 IST)
எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால் நாளையே பொதுக்குழுவை கூட்ட தயார் என எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் ராஜன் செல்லப்பா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அதிமுக பொது குழு குறித்த வழக்கு இன்று நடைபெற்ற போது ஓபிஎஸ் அணியையும் சேர்த்து அதிமுக பொது குழு கூட்ட வேண்டும் என்றும் அந்த பொதுக்குழுவில் வேட்பாளரை தேர்வு செய்து அவை தலைவர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டால் நாளைய பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய நாங்கள் தயார் என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா அவர்கள் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அதிமுக பொது குழு கூட்டம் மீண்டும் கூடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்