இன்னும் 2 மணி நேரத்தில் மழை: எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (08:00 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்னும் இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
சென்னையில் உள்ள பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக தேனாம்பேட்டை எழும்பூர் சைதாப்பேட்டை போன்ற பகுதிகளில் மழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் ராணிப்பேட்டை வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்னும் இரண்டு மணி நேரத்தில் மிதமான மழை வாய்ப்பு என்றும் இந்த மாவட்டங்களில் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
 
இந்த அறிவிப்பு காரணமாக 6 மாவட்ட மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்