நாளை மறுநாள் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (13:08 IST)
தமிழகத்தின் மழை நிலவரங்கள் குறித்து அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
 
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை மறுநாள் நீலகிரி கோவை திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
 
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் சாரல் மழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்