2028 ஆம் ஆண்டுக்குள் புதிய விமான நிலையம் அமைக்காவிட்டால் சென்னையின் வளர்ச்சி தேக்கம் அடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை அருகே புதிய விமான நிலையம் அமைப்பு இன்றியமையாதது என்றும் வர்த்தகம் சுற்றுலா தொழில்கள் சரக்கு போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய விமான நிலையம் அவசியம் தேவை என்றும் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்