சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (08:00 IST)
சென்னையில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது ஏற்கனவே பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று தொண்ணூற்று இரண்டாவது நாளாகவும் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
இந்தியாவின் அண்டை நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டி வரும் நிலையில் இந்தியாவில் மூன்று மாதங்களுக்கும் மேலாக மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
 
ஆனால் அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலை இன்னும் குறைய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனைக்கு வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்