சென்னையில் பரவலாக மழை!

Webdunia
ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (13:30 IST)
தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. 

 
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாக பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் 25 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.  
 
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. 
 
சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்குளத்தூர், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் காலை முதல் மிதமான மழை பெய்தது. மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்