அநீதிக்கு எதிரான வெற்றிக்கு வாழ்த்துக்கள்! – ராகுல்காந்தி ட்வீட்!

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (10:25 IST)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில் அதுகுறித்து ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கடந்த ஆண்டு வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய நிலையில் விவசாயிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா காலகட்டத்திலும் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலமாக இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி வேளாண் சட்டங்கள் முறைப்படி திரும்ப பெறப்படும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி “நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயிகளின் சத்தியாகிரகத்திற்கு ஆணவம் தலை குனிந்தது. அநீதிக்கு எதிரான வெற்றிக்கு வாழ்த்துக்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்