வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு ஆழ்ந்த, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக உருவாகியுள்ள நிலையில், இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா அருகே செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களுக்கு ஏற்கனவே மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கன மழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று மழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.