கருணாநிதியை சந்திக்க சென்னை வரும் ராகுல்காந்தி....

Webdunia
செவ்வாய், 31 ஜூலை 2018 (10:18 IST)
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னை வர இருக்கிறார்.

 
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதிக்கு கடந்த 4 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது அவரது உடல்நிலை மோசமடைந்தாலும், மருத்துவர்களின் சிகிச்சை காரணமாக அவர் உடல் நிலை சீரான நிலையில் இருந்து வருகிறது.
 
தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் திரைபிரலங்கள் பலரும் தினமும் மருத்துவமனை வந்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்து செல்கின்றனர்.
 
இந்நிலையில், கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரிக்க காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல்காந்தி இன்று சென்னை வருகிறார். டெல்லியிலிருந்து சரியாக 12.30 மணிக்கு கிளம்பும் விமானத்தில் வரும் அவர் 3.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து காரின் வழியாக நேராக காவேரி மருத்துவமனை சென்று கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க இருக்கிறார். அதன் பின் மாலையே அவர் விமானம் மூலம் டெல்லி கிளம்பி செல்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்