பேராசிரியர் அன்பழகன் உடல் ஊர்வலம்... வேலங்காடு மின்மயானத்தில் உடல் தகனம் !

Webdunia
சனி, 7 மார்ச் 2020 (16:48 IST)
பேராசிரியர் அன்பழகன் உடல் ஊர்வலம்... வேலங்காடு மின்மயானத்தில் உடல் தகனம் !

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த 12 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளித்தும் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் நேற்று இரவு அவர் மறைந்தார்.
 
தற்போது கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்  உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், தற்போது பேராசியர் அன்பழகன் உடல் அங்கலரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து இறுதி ஊர்வலமாகக்  கொண்டு செல்லப்படுகிறது.
 
கீழ்ப்பாக்கம் அருகே உள்ள வேலங்காடு இடுகாட்டில்  பேராசிரியர் அன்பழகன் உடல் தகனம் செய்யப்படவுள்ளது. 
 
திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் இறுதி ஊர்வலத்தில், எம்பி கனிமொழி,தயாநிதி மாறன், உள்ளிட்ட   ஏராளமான பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்