94 வயதான தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வயது மூப்பு காரணமாக சில மாதங்களாக நடவடிக்கைகளில் ஈடுபடாமல் முழு ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு அவ்வப்போது மருத்துவர்கள் வீட்டிலேயே சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றிரவு க.அன்பழகன் அவர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் திமுக தரப்பில் இருந்து கூறப்படுகிறது.