திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்!

சனி, 7 மார்ச் 2020 (06:06 IST)
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்!
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 98. 1922ஆம் ஆண்டு பிறந்த க.அன்பழகன் அவர்கள் பல ஆண்டுகளாக திமுகவின் வளர்ச்சிக்கு கடுமையாக பாடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதியின் உற்ற நண்பராக இருந்த க.அன்பழகன் அவர்களின் இழப்பு அக்கட்சிக்கு பேரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் க.அன்பழகன் அவர்கள் மறைவு குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
 
`முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உற்ற தோழனாகவும், 43 ஆண்டுகள் கழகத்தின் பொதுச் செயலாளராகவும், கழக ஆட்சியில் சமூக நலம், மக்கள் நல்வாழ்வு, கல்வி மற்றும் நிதி ஆகிய துறைகளின் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் தமிழாய்ந்த பேராசிரியராகவும் விளங்கிய கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் சில நாட்கள் உடல் நலிவுற்றிருந்து இன்று 07-03-2020 அதிகாலை 1:00 மணியளவில் மறைவெய்தியதையொட்டி, கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்று முதல் ஒருவார காலம் தள்ளிவைக்கப்பட்டு, கழகக் கொடிகள் ஏழு நாட்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்