நான் சொல்லும் இடத்தில் முதல்வர் குளிக்க தயாரா? பிரேமலதா கேள்வி

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2017 (10:14 IST)
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மனைவியும் தேமுதிக கட்சியின் முக்கிய பிரமுகருமான பிரேமலதா விஜயகாந்த் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் நேற்று அவரை கோவை மருத்துவமனையில் ஆய்வு செய்ய போலீசார் அனுமதியளிக்க மறுத்தனர்


 


இந்த நிலையில் நொய்யல் ஆற்றில் சுகாதார கேடு அதிகரித்து வருவதாகவும், சமீபத்தில் காவிரியில் குளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நொய்யல் ஆற்றில் குளிக்க தயாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் 144 வருடங்களுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் காவிரி மகா புஷ்கர விழாவினையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் மயிலாடுதுறை காவிரி வடக்குக் கரையில் புனித நீராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்