தேமுதிகவுக்கு பயந்து தமிழகத்துக்கு ஆளுநரை நியமித்த டெல்லி: பிரேமலதா இப்படியும் பேசுவாங்களா!

ஞாயிறு, 1 அக்டோபர் 2017 (12:04 IST)
தமிழக முழு நேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்தார். இந்த ஆளுநர் நியமனத்துக்கு தேமுதிக நிறைவேற்றிய தீர்மானம் தான் காரணம் என தேமுதிக மகளிர் அணி செயலர் பிரேமலதா கூறியுள்ளார்.


 
 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பிஎல்பி திருமண மண்டபத்தில் நேற்று தேமுதிக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு கெடுபிடிகள் அதிகமாக இருந்தது. நீட் தேர்வுக்காக போராடி தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவுக்கு ஒரு நிமிடம் எழுந்து மௌன அஞ்சலி செலுத்திவிட்டு பொதுக்குழுவை தொடங்கினார்கள்.
 
இந்த விழாவில் பேசிய விஜயகாந்தின் மனைவியும், கட்சியின் மகளின் அணி செயலாளருமான பிரேமலதா, தமிழ்நாட்டுக்கு நிரந்தரமான கவர்னர் வேண்டும் என்று நாம் போட்டுள்ள தீர்மானம் டெல்லிக்குத் தெரிந்துதான், உடனடியாக நிரந்தரமான ஆளுநரை அறிவித்துள்ளது மத்திய அரசு. எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி முடிந்து ஆளுநர் ஆட்சி வரப்போவதால் தான் நிரந்தர ஆளுநரை நியமித்துள்ளார்கள் என தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்