நான்கு நாட்களில் ஆட்சி கவிழும்: விஜயகாந்த் அதிரடி!

ஞாயிறு, 1 அக்டோபர் 2017 (09:50 IST)
தேமுதிகவின் பொதுக்குழு கூட்டம் காரைக்குடியில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அந்த கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த், இன்னும் நான்கு நாள்களில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று அதிரடியாக கூறியுள்ளார்.


 
 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பிஎல்பி திருமண மண்டபத்தில் நேற்று தேமுதிக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு கெடுபிடிகள் அதிகமாக இருந்தது. நீட் தேர்வுக்காக போராடி தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவுக்கு ஒரு நிமிடம் எழுந்து மௌன அஞ்சலி செலுத்திவிட்டு பொதுக்குழுவை தொடங்கினார்கள்.
 
பொதுக்குழுவில் பேசிய விஜயகாந்த், நாடு முழுவதும் சமச்சீர் கல்வியைக் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கைவிடுத்தார். மாயவரத்தில் நீராடி பாவத்தைக் கழிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கெலவரப்பள்ளி அணை நிரம்பிவரும் ஆற்றில் குளிக்க வேண்டியதுதானே. அவர் எந்த தண்ணீரில் குளித்தாலும் பாவம் போகாது என்றார்.
 
மேலும் தமிழ்நாட்டுக்கு நன்மை நடக்க வேண்டும் என்றால் திமுக, அதிமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது. ஸ்டாலினுக்குக் கூடும் கூட்டம் பணத்துக்கானது. ஆனால், எனக்குக் கூடும் கூட்டம் அப்படியல்ல. விஜயதசமி அன்று ஆளுநர் வந்துள்ளார். இன்னும் நான்கு நாள்களுக்குள் அதிமுக ஆட்சி கலைந்துவிடும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்