தமிழக முழுவதும் "வீட்டுக்கு ஒரு ஓட்டு" என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இளைஞர்களின் வாக்குகளை குறி வைக்க வேண்டும் என்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் நேற்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை சந்தித்ததாகவும், கட்சிக்கு அவர் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், இன்று அவர் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளை சந்தித்ததாகவும், அப்போது மேலும் சில ஆலோசனைகளை வழங்கி விட்டு அதன் பின் மீண்டும் விஜய்யை சந்தித்ததாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது, இளைஞர்களின் வாக்குகளை மொத்தமாக உறுதி செய்ய வேண்டும் என்றும், "வீட்டுக்கு ஒரு ஓட்டு" என்பதை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, கட்சி கட்டமைப்பு, நிர்வாகிகள் அதிகாரம், நிர்வாகிகளின் செயல்பாடுகள் ஆகியவற்றை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதற்கும் ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல்களை கருத்தில் கொண்டால், 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு தமிழக வெற்றி கழகத்தின் வெற்றிக்காக பிரசாந்த் கிஷோர் பணிபுரிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.