ஓபிஎஸ் ஆதரவு போஸ்டர் கிழிப்பு!!

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (10:25 IST)
சேலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 
அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் சமீப காலமாக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் சென்னையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் 4வது நாளாக ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், மைத்ரேயன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகிறார்.
 
இதனிடையே சேலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமை ஏற்று கழகத்தை வழி நடத்த வாருங்கள் என குறிப்பிட்டு ஓபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன இது தற்போது கிழிக்கப்பட்டுள்ளது. 
 
இதற்கு முன்னதாக ஓபிஎஸ் அதிமுகவில் என்னை ஓரம் கட்ட முடியாது என்றும் ஆனால் அதே நேரத்தில் எந்த வித அதிகார ஆசையும் நான் கொண்டவன் இல்லை என்றும் தெரிவித்தார். தொடர்களிடமிருந்து என்னை பிரிக்க முடியாது என்றும் தொண்டர்களை காப்பாற்றவே நான் பொறுப்பில் இருக்கிறேன் என்றும் தெரிவித்தார். 
 
முதல்வராக இருந்தபோதும் சரி ஒருங்கிணைப்பாளராக இருந்தபோதும் சரி ஒரு சாதாரண தொண்டனாக இருக்கிறேன் என்றும் ஒற்றை தலைமை பேச்சு ஏன் உருவானது என்றே தெரியவில்லை என்றும் நானும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் ஒற்றை தலைமை குறித்து பேசியது இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்