முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது தாக்குதலா? பெரும் பரபரப்பு
வியாழன், 16 ஜூன் 2022 (13:14 IST)
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக அதிமுக தலைமை அலுவலகம் பரபரப்பில் உள்ளது என்றும் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை காரணமாக தொண்டர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகம் சென்றுவிட்டு திரும்பி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வந்து கொண்டிருந்தபோது அவரது கார் மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது
மேலும் கட்சியை அழித்தவனே என கூச்சலிட்டு ஆபாச வார்த்தைகளால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜெயக்க்குமார் கார் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது