ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு வழக்கத்தை விட நான்கு நாட்களுக்கு முன்னதாகவே தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி, திருத்தணி, திருச்சி, தர்மபுரி ஆகிய இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது.