நடிகை குஷ்புவுக்கு ஆதராவாக பிரபல நடிகர் பிரசாரம்

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (22:50 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. இதற்கான அமைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் முழுக்க ஒரே கட்டமாக நடைபெறவுள்ள இத்தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்புவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளதாக நடிகர் கார்த்திக் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தலைவரும் நடிகருமான கார்த்தி இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, எனக்கு பாஜகவில் இருந்து அழைப்பு வந்தது. எனவே  வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர் குஷ்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்