விமான பயணிகளுக்கு இரண்டு பொங்கல்: ஜெட் ஏர்வேஸ் ஏற்பாடு

Webdunia
வெள்ளி, 12 ஜனவரி 2018 (23:17 IST)
வரும் 14ஆம் தேதி தமிழர்கள் வாழும் பகுதி முழுவதும் பொங்கல் திருநாள் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே பொங்கல் திருநாளுக்கு இருப்பதால் இப்போதே களைகட்ட தொடங்கிவிட்டது

இந்த நிலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல் என இரண்டு வகை பொங்கல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் நாளில் சென்னையில் இருந்து புறப்படும் ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் பயணம் செய்பவர்களுக்குகு வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் வழங்கப்படவுள்ளதாகவும், நடுவானில் பயணிகள் மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாடலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் விமானத்தில் சிற்றுண்டி உணவுப்பட்டியலில் அன்றைய தினம் தமிழரின் பாரம்பரிய உணவான பொங்கலை காலை, மதியம், இரவு மூன்று வேளைகளிலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால், பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்